பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

ஆக்ஸ்போர்ட் கரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்கு தன்னார்வலர்கள் தேர்வு கூடாது: செரம் நிறுவனத்துக்கு டிஜிஜிஐ உத்தரவு

பிடிஐ


ஆக்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்ட்டியூட், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின் கோவிஷீல்ட் கரோனா தடுப்பு மருந்தின் 2-ம்,3-ம் கட்ட கிளிக்கல் பரிசோதனைக்காக தன்னார்வலர்களைத் தேர்வு செய்யும் பணியை நிறுத்த வேண்டும் என்று செரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியாவுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்ட் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்குக் கடுமையான பக்கவிளைவுகள் கடந்த வாரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை உடனடியாக பல்வேறு நாடுகளிலும் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கோவிஷீல்ட் மருந்தின் 2-வது கட்டம் மற்றும் 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையை இந்தியாவில் நடத்த செரம் மருந்து நிறுவனம் நடத்தி வந்தது.

இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று செரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியததைத் தொடர்ந்து கிளிக்கல் பரிசோதனை நிறுத்தப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் இயக்குநர் வி.ஜி.சோமானி நேற்று செரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் “ ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்ட் தடுப்பு மருந்தின் கிளிக்கல் பரிசோதனையை இந்தியாவில் நடத்துவதை நிறுத்தி வைத்து ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளோம்.

இந்த மருந்தின் பரிசோதனைக்காக புதிதாக தன்னார்வலர்களைத் தேர்வு செய்யவதையும் நிறுத்த வேண்டும்.இந்த மருந்தை ஏற்கெனவே பலருக்கு கொடுத்து பரிசோதனை செய்திருந்தால், அவர்களின் உடல்நிலையை உன்னிப்பாக கவனித்து வர வேண்டும்.

மீண்டும் கிளிக்கல் பரிசோதனையை தொடங்கும் முன், பிரிட்டனில் உள்ள மருந்து பாதுகாப்பு கண்காணிப்பு வாரியத்திடம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அனுமதி பெற வேண்டும், இந்தியாவிலும் தேசிய மருந்துக்கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி பெற்றபின்புதான் மீண்டும் கிளிக்கல் பரிசோதனை தொடங்க வேண்டும்” எனத் தெரிவி்த்துள்ளார்.

SCROLL FOR NEXT