கோப்புப்படம் 
இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 97 ஆயிரம் பேருக்கு தொற்று: 46  லட்சமாக கரோனா பாதிப்பு அதிகரிப்பு: உயிரிழப்பு 77 ஆயிரத்தைக் கடந்தது

பிடிஐ

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு புதிதாக 97 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதன் மூலம் ஒட்டு மொத்த பாதிப்பு 46 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைராஸ் புதிதாக 97 ஆயித்து 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 46 லட்சத்து 59 ஆயிரத்து 954 ஆக அதிரித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி 20 லட்சத்தையும், 20-ம் தேதி 30 லட்சத்தையும், கடந்த 5-ம் தேதி 40 லட்சத்தையும் கரோனா தொற்று எட்டியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 3-வது நாளாக நாள்தோறும் 95 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஆறுதல் அளிக்கும் விதத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 36 லட்சத்து 24 ஆயிரத்து 196 ஆக உயர்ந்து, 77.77 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 லட்சத்து 58ஆயிரத்து 316 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20.56 சதவீதமாக இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 1,201 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 77 ஆயிரத்து 472 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்போர் வீதம் 1.67 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,201 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 442 பேரும், கர்நாடகத்தில் 130 பேரும், ஆந்திரா, தமிழகத்தில் தலா 77 பேரும் உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் 76 பேரும், பஞ்சாபில் 63 பேரும், மேற்கு வங்கத்தில் 57 பேரும், மத்தியப்பிரதேசத்தில் 30 பேரும், சத்தீஸ்கரில் 26 பேரும், ஹரியாணாவில் 25 பேரும், டெல்லியில் 21 பேரும் உயிரிழந்தனர்.

அசாம், குஜராத்தில் தலா 16 பேர், ஜார்கண்ட், ராஜஸ்தாநில் தலா 15 பேர், கேரளா, ஒடிசாவில் தலா 14 பேர், பிஹார், புதுச்சேரியில் தலா 12 பேர், உத்தரகாண்டில் 11 பேர், தெலங்கானாவில் 10 பேர், ஜம்மு காஷ்மீர், திரிபுராவில் தலா 9 பேர், கோவாவில் 8 பேர், இமாச்சலப்பிரதேசத்தில் 5 பேர், மேகாலயாவில் 4 பேர், சண்டிகரில் 3 பேர், லடாக்கில் 2 பேர், அருணாச்சலப்பிரதேசம், சிக்கிமில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

ஐசிஎம்ஆர் தகவலின் படி இதுவரை நாட்டில் 5 கோடியே 51 லட்சத்து 89 ஆயிரத்து 226 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 10 லட்சத்து 91 ஆயிரத்து 251 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 442 பேர் உயிரிழந்த நிலையில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 28 ஆயிரத்து 724 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 71 ஆயிரத்து 974 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 77 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 8 ஆயிரத்து 231 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 918 ஆக குறைந்துள்ளது.

டெல்லியில் கரோனாவில் நேற்று மட்டும் 21 பேர் உயிரிழந்ததால், ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,687ஆக அதிரித்துள்ளது. கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 907 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் நேற்று 16 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு 3,180 ஆக அதிரித்துள்ளது. கரோனாவில் 16,286 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் கரோனாவில் 98 ஆயிரத்து 345 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு நேற்று 130 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த எண்ணிக்கை 7,067 அதிகரித்துள்ளது.

கேரள மாநிலத்தில் கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 27,944 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 410 ஆகவும் அதிகரித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கரோனாவில் 96,191 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு நேற்று மட்டும், 77 பேர் உயிரிழந்ததையடுத்து, 4,779 ஆக உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT