இந்தியா

சீனா ஆக்கிரமிப்பு கடவுள் செயலா? - ராகுல் கேள்வி

செய்திப்பிரிவு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியதாவது:

நமது நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது. அந்த நிலத்தை எப்போது திரும்பப் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அல்லது இதுவும் கடவுள் செயல்என விட்டுவிடப் போகிறதா? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

லடாக் பகுதியில் பிங்கர், கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றது. இதை இந்திய ராணுவம் தடுத்தது. இதனால் இந்தியா சீனா இடையே மோதல் போக்கு நிலவுகிறது.

இதனிடையே, நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிவுக்கு கடவுளின் செயலே (கரோனா வைரஸ்) காரணம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இதை கிண்டல் செய்யும் வகையில் ராகுல் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT