அயோத்தி ராமர் கோயில் கட்ட அமைக்கப்பட்ட ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிலிருந்து அடையாளம் தெரியாத சில நபர்கள் பெரிய தொகையை எடுத்து மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. போலி கையெழுத்துக் கொண்ட காசோலைகள் மூலம் வங்கிக்கணக்கிலிருந்து தொகையை மோசடியாக எடுத்துள்ளனர்.
லக்னோவில் உள்ள 2 வங்கிகளிலிருந்து இந்தத் தொகை எடுக்கப்பட்டுள்ளது. 3வது முறையாக பணத்தை எடுக்கும்போதுதான் வங்கி அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய்க்கு தகவல் தெரிவித்தது.
ராமர்கோவில் கட்டுவதற்காக ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை மூலம் 161 அடி உயரத்தில் 5 கோபுரங்களுடன் மிகப்பிரமாண்டமான முறையில் 3 ஆண்டுகளுக்குள் ராமர் கோவில் கட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பூஜையும் நடைபெற்று பணிகள் நடந்து வருகின்றன
இந்நிலையில் வங்கிக் கணக்கில் மோசடி செய்து பணத்தை எடுத்தவருக்கு எதிராக அயோத்தி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.6 லட்சம் வரை மோசடி நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.