மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த நடைபாதை வியாபாரிகளுடன் நடந்த ‘ஸ்வாநிதி சம்வாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார்.
பிரதமர் ஸ்வாநிதி 2020 ஜூன் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. கோவிட்-19 பொது முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகள் தங்கள் தொழிலை மீண்டும் செய்து, வாழ்வாதாரம் பெறுவதற்கு தேவையான முதலீட்டைக் கடனாக வழங்க இது வகை செய்கிறது.
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்குவதற்காக பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
4.5 லட்சம் நடைபாதை வியாபாரிகள், இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டனர். இவர்களில் 1.4 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு ரூ.140 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த நடைபாதை வியாபாரிகளுடன் ‘ஸ்வாநிதி சம்வாத்’ நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி நடத்தினார்.