பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

ராஜஸ்தான் விவசாயிக்கு ரூ.3.71 கோடிக்கு மின்சாரக் கட்டண பில்: கிராமமே அதிர்ச்சி

செய்திப்பிரிவு

ராஜஸ்தான் மாநில உதய்பூரில் வசிக்கும் பெமராம் மனதங்கி என்ற விவசாயிக்கு ரூ.3.71 கோடி மின்சாரக் கட்டணம் செலுத்துமாறு பில் வந்ததையடுத்து கடும் அதிர்ச்சியில் உறைந்தார்.

அவரது தொலைபேசி எண்ணிற்கு தொடர்ச்சியாக இது தொடர்பாக அழைப்புகள் வந்த நிலையில் அவரது மின்சாரக் கட்டண பில் சமூகவலைத்தளத்திலும் பதிவேற்றப்பட்டு வளைய வந்து கொண்டிருக்கிறது.

இதனையடுத்து அஜ்மீர் வித்யூத் வித்ரன் லிமிடெட், மாநில அரசு மீது கடும் கிண்டல்களை நெட்டிசன்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். 2 மாத மின் கட்டணமாக ரூ.3 கோடிக்கும் மேல் எப்படி வரும் என்று நெட்டிசன்கள் அரசையும் மின் வாரியத்தையும் சாடி வருகின்றனர்.

2 மாத மின் கட்டணமாக ரூ. 3 கோடியே 71 லட்சத்து 61 ஆயிரத்து 507 தீட்டப்பட்டுள்ளது. செப்.3ம் தேதிக்குள் இந்தத் தொகையைச் செலுத்தவில்லை எனில் ரூ.7.16லட்சம் தாமதக் கட்டணம் வேறு வசூலிக்கப்படுமாம்.

அதிர்ச்சியடைந்த விவசாயி மின் வினியோக அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட போது தவறாக அச்சாகி விட்டது, ரூ.6000 த்திற்கான புதிய பில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். இவரும் இந்த ரூ.6,000த்தைச் செலுத்தி விட்டார்.

“நான் உண்மையில் அதிர்ச்சியடைந்து விட்டேன், மயக்கமே வந்து விட்டது. விவசாய நிலத்தில் வேலையே நடக்கவில்லை” என்கிறார் அந்த விவசாயி.

இவர் மட்டுமல்ல இன்னொரு கிராமவாசி ஷங்கர்லால் பாண்டே என்பவருக்கு ரூ.1.71 லட்சம் மின் கட்டணம் பில் வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வாகனங்களை பழுது நீக்கும் மையம் நடத்தி வருகிறார். இந்த கடையில் கடந்த இரு மாதங்களுக்கான மின் கட்டணமாக 3.71 கோடி ரூபாய் கட்டணம் செலுத்தும்படி மின்சார அலுவலகம் சார்பில் பில் அனுப்பி வைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT