கேரளாவில் பெண் நோயாளிகளை இரவு நேரங்களில் ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இரவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில், ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஆம்புலன்ஸ் இயக்கப்படுவது தொடர்பாக அம்மாநில அரசு கடுமையான விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, மிகவும் அவசரம் என்றால் ஒழிய, பெண் நோயாளிகளை இரவு 8 மணிக்கு மேல் ஆம்புலன்ஸ்களில் கொண்டு செல்லக்கூடாது.
அதேபோல், பெண் நோயாளிகளை ஆம்புலன்ஸ்களில் அழைத்துச் செல்லும் போது செவிலியர் ஒருவர் கட்டாயம் உடன் இருக்கவேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் அமல்படுத்தப் பட்டுள்ளன.