இந்தியா

குஜராத்தில் படேல் சமூகத்தினரின் போராட்டம் ஏன்?

ஆகார் படேல்

இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து குஜராத்தில் படேல் சமூகத்தினர் நடத்தி வரும் போராட்டத்தை தொடர்ந்து கவனித்து வருபவர்களிடம் கேட்க என்னிடம் இரு கேள்விகள் உள்ளன.

இதுபோன்ற போராட்டம் 25 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. ஆனால் இப்போது ஏன் இந்த போராட்டம் நாட்டின் மற்ற இடங்களில் நடைபெறவில்லை.

இரண்டாவதாக, மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் இதுபோன்ற போராட் டம் நடைபெற்றால், அவர்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக என்ன பேசியிருப்பார்கள். இதுதான் எனது அந்த 2 கேள்விகள்.

எங்களுக்கு இடஒதுக்கீடு வழங்குங்கள் அல்லது இடஒதுக்கீடு முறையையே முற்றிலுமாக ரத்து செய்யுங்கள் என்பதே படேல் சமூகத்தினரின் கோரிக்கை.

இதில் உள்ள இரண்டாவது கோரிக்கை நகர்ப்புறங்களில் உள்ள மத்திய தர வர்க்கத்தினரின் நெடுநாளைய கோரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. எனவேதான் குஜராத்தில் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக லட்சக்கணக்கானோர் கூடினார்கள்.

2012-ம் ஆண்டில் குஜராத் மாடல் வளர்ச்சி என்பது பற்றி முதல்முறையாக பேசப்பட்டபோது நான் அது தொடர்பாக எழுதினேன். அப்போது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறையின் பங்களிப்பு 59 சதவீதம். ஆனால் குஜராத்தில் சேவைத் துறையின் பங்களிப்பு 46 சதவீதம்தான். இது தேசிய சராசரியைவிட 13 சதவீதம் குறைவு.

குஜராத்தின் மாநில அளவிலான உற்பத்தியில் தொழில்துறையின் பங்களிப்பு 41 சதவீதம். (தேசிய அளவில் தொழில்துறையின் பங்க ளிப்பு 30 சதவீதம்). எனவே புதிய பொருளாதார சீர்திருத்தங்களால் மாற்றம் ஏற்பட்டு அதனால் கிடைத்த பலன் குஜராத்தை எட்டவில்லை. தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியால் நாட்டின் பிற நகரங்களுக்கு மேற்கத்திய நாடுகளில் இருந்து பொருளாதார பலன்கள் கிடைத்தன. குஜராத் அதில் இருந்து விலகியே இருந்தது. முக்கியமாக ஐடி நிறுவனங்களால் ஏற்பட்ட பொருளாதார புரட்சியானது குஜராத்தில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. எனவே நாட்டின் மற்ற பெரிய நகரங்களைவிட குஜராத்தில் நடுத்தர மக்களிடையே பணப் புழக்கம் சற்று குறைவுதான். அங்கு ரியல் எஸ்டேட் தொழிலின் வளர்ச்சி குறைவு, காரணம் அங்கு அதற்கான தேவையும் சற்று குறைவு. பிரதமர் மோடி கூட முன்பு இதனை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

இந்ந நிலையில்தான், ஐ.டி. பார்க் அமைக்க முன்வருபவர்களுக்கு முத்திரைத்தாள் கட்டணத்தில் சலுகை அளிப்பது, சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்குவது, முதல் 5 ஆண்டுகளுக்கு மின் கட்டண சலுகை தருவது, மின் தடையில் இருந்து விலக்கு, தொழிலாளர் சட்டத்தை எளிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் குஜராத்தில் எடுக்கப்பட்டன. இவற்றாலும் பெரிய அளவில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்கவில்லை. ஐ.டி. துறை யில் பணியாற்ற திறன்மிகு பணி யாளர்கள் போதிய அளவு கிடைக்காததும் இதற்கு முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டப் படுகிறது. குஜராத்தில் பொறியியல் கல்வி நிறுவனங்கள் குறைவு என்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசும்புலமை மிக்கவர்கள் குறைவு என்றும் கூறப்பட்டது.

இப்போது மீண்டும் நமது கேள்விக்கு வருவோம். மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதரா பாத், குர்காவ்ன், நொய்டா ஆகிய இடங்களில் இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் இருந்தன. திறமை இருந்தால் “ஒயிட் காலர் ஜாப்”களுக்கு அங்கு பஞ்சம் இல்லை. படித்தவர்களுக்கு தனியார் துறையில் எப்படியும் ஒரு வேலை கிடைத்து விடுகிறது.

இந்த வாரம் எனது அலுவலகத்தில் ஐ.டி. துறை வேலைவாய்ப்பு பற்றி ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. குறைந்த அளவு கம்ப்யூட்டர் அறிவு மட்டும் தேவைப்படும் முதல்நிலை வேலைக்கு கூட ரூ. 30 ஆயிரம் மாத சம்பளம் வழங்கப்படுவது அப்போது தெரியவந்தது. ஆங்கில அறிவுடன் சர்வதேச சூழ்நிலைகளுக்கு தங்களை இணைத்துக் கொள்பவர்களுக்கு வேலைவாய்ப்பு ஒரு பிரச்சினையே இல்லை. ஆனால் குஜராத்தில் இங்குதான் பிரச்சினையே தொடங்குகிறது. அங்கு அரசுப் பள்ளிகளில் 5-ம் வகுப்புக்கு பிறகுதான் ஆங்கில மொழிப் பாடம் கற்பிக்கப்படுகிறது.

படேல் மக்களின் போராட்டம் குறித்து தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நான் பங்கேற்றேன். மேற்குவங்கத்திலும் ஆங்கிலத் துக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லையே, அங்கு இதுபோன்ற பிரச்சினை எழவில்லையே என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலும் உடனே கிடைத்தது. மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவில் ஆங்கிலேயர்கள் அதிக காலம் இருந்தனர். எனவே அங்கு ஆங்கில வழிப் பள்ளிகள் அதிகம் இருந்தன. எனவே கொல்கத்தாவில் உள்ள வர்கள் அகமதாபாத் சந்திக்கும் பிரச்சினையை எதிர்கொள்ள வில்லை.

குஜராத்தில் நடைபெற்ற போராட்டம் சுமார் 25 ஆண்டு களுக்கு முன்பு மண்டல் கமிஷ னுக்கு எதிராக நடந்த போராட் டத்தை நினைவு கூர்வதாகவே அமைகிறது. ஏன் இதுபோன்ற நிகழ்வுகள் இன்னும் நம் நாட்டில் நிகழ்கின்றன என்பதை நாம் ஒவ்வொரு வரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

SCROLL FOR NEXT