இந்தியா

தெலுங்கு நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி மறைவு; பிரதமர் மோடி இரங்கல்

செய்திப்பிரிவு

தெலுங்கு நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. வில்லன், காமெடி, குணச்சித்திர கதாபாத்திரம் என்று அனைத்திலும் நடித்து புகழ் பெற்றவர். இன்று (செப்டம்பர் 8) வீட்டில் பாத்ரூம் செல்லும் போது மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார். அவருக்கு வயது 73.

இவருடைய திடீர் மறைவு, தெலுங்கு திரையுலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவருடைய மறைவுக்கு முன்னணி நடிகர்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தெலுங்கு நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், ‘‘ஜெய பிரகாஷ் ரெட்டி, தனது தனிச்சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.

அவரது நீண்டகால நடிப்பு தொழிலில், நினைவுகூறத்தக்க பல பாத்திரங்களில் அவர் நடித்துள்ளார். அவரது மறைவால் திரையுலகுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள்.’’ என குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT