மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவிட்-19 நோயாளிகளின் சிகிச்சையில் தனியார் மருத்துவமனைகள் வசூலித்த கூடுதல் கட்டணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்குமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.1.93 லட்சம் முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்க ஜல்னா மாவட்ட ஆட்சிய ரவீந்திர பின்வாதே உத்தரவிட்டார். மகாராஷ்டிராவில் மட்டுமல்ல இந்தியா முழுதுமே தனியார் மருத்துவமனைகள் கரோனா நோயாளிகள் சிகிச்சையில் கடுமையான கட்டணங்களை அளவுக்கு அதிகமாக வசூலித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஜல்னா மாவட்ட கலெக்டர் ஆடிட்டர்களை நியமித்து நோயாளிகளின் கட்டண ரசீதுகளை ஆய்வு செய்ய வைத்தார். அதில் விவேகானந்தர் தனியார் மருத்துவமனை நோயாளிகளிடம் கூடுதலாக 1,93,986 தீட்டியிருப்பது தெரியவர அந்தத் தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188-ன் கீழும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழும் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த மாதம் ஆரோக்கியம் மருத்துவமனை என்ற தனியார் ஆஸ்பத்திரியின் உரிமம் பறிக்கப்பட்டது. சேவையே செய்யாமல் கட்டணங்களை கூடுதலாக வசூலித்தமைக்காக தண்டனை அளிக்கப்பட்டது.
அதிக கட்டண வசூல் செய்யும் தனியார் மருத்துவமனைகளின் பில்கள் கண்காணிக்கப்படுகின்றன.
இதற்காக கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது, அதாவது மஹாத்மா ஜோதிபா பூலே ஜன் ஆரோக்கிய யோஜனா, பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டங்களை தனியார் மருத்துவமனைகள் சரிவர நடைமுறைப்படுத்துகிறதா என்பதை கண்காணித்து வருகின்றனர்.