இந்தியா

திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் வெளியீடு

செய்திப்பிரிவு

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவரும் 19-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி, 27-ம்தேதி வரை தொடர்ந்து 9 நாட் களுக்கு நடைபெற உள்ளது.

இதையொட்டி, வரும் 15-ம் தேதி கோயிலை சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 18-ம் தேதி அங்குரார்ப் பணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த அங்குரார்ப்பணம் நிகழ்ச்சியின்போது ஏழுமலையானின் சேனாதிபதி யான விஸ்வகேசவர்4 மாட வீதிகளில் பவனி வந்துபிரம்மோற்சவ ஏற்பாடுகளைமேற்பார்வையிடுவார் என்பதுஐதீகம். பிரம்மோற்சவம் நடைபெறும் மேற்கூறிய 9 நாட்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக ரூ.300 சிறப்புதரிசன டிக்கெட் இதுவரைவழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த டிக்கெட்கள் நேற்று மாலை 4 மணிக்கு பக்தர்கள் தேவஸ்தான இணையதள முகவரியான https://tirupatibalaji.ap.gov.in/#/-ல்login செய்து டிக்கெட் முன்பதிவு செய்யும் விதமாக தேவஸ்தானம் வெளியிட்டது.

பக்தர்கள் கோரிக்கை

திருப்பதி ஏழுமலையானை பாமர பக்தனும் தரிசிக்கும் வகையில் வழி வகுக்கப்பட்டுள்ள தர்ம தரிசனம் என்றழைக்கப்படும் இலவச தரிசனத்தை வரும் 30-ம் தேதி வரை திருமலை திருப்பதி தேவஸ்தானம் திடீ ரென ஞாயிற்றுக்கிழமை முதல் ரத்து செய்தது. எவ்வித முன்னறிப்பும் இன்றி இந்த அறிவிப்பு வெளியானதால், வெளி ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் செய்வதறியாது தவித்தனர்.

இதுபோன்ற அறிவிப்புகளை தேவஸ்தானம் குறைந்தபட்சம் ஒரு நாள் முன்னதாகவே அறி வித்திருக்க வேண்டும் என பக்தர் கள் கருத்து தெரிவித்தனர். பாமர பக்தர்களுக்கு வசதியாக உள்ள தர்ம தரிசனத்தை ரத்து செய்யக் கூடாது என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT