கிழக்கு லடாக்கில் இந்திய-சீன படைகளின் நிலைகள் ‘மிகவும் சீரியஸ்’ என்றும் ‘அரசியல் மட்டத்தில் ஆழமான உரையாடல் அவசியம்’ என்றும் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸின் இ-அட்டா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஜெய்சங்கர். அப்போது செப்.10ம் தேதி மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சரகள் மாநாட்டில் சீன வெளியுறவு அமைச்சரைச் சந்தித்தால் என்ன கூறுவீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு ஜெய்சங்கர், “30 ஆண்டுகளாக எல்லையில் அமைதியும் சமாதானமும் நிலவியது, இதுதான் உறவுகள் மேம்பாடு அடைந்ததுக்கும் காரணம்” என்று கூறுவேன் என்றார்.
வங்கதேசத்துடனான உறவு குறித்து ஜெய்சங்கர் கூறுகையில், இந்தியாவும் வங்கதேசமும் இணைந்து தூதரக கமிஷன் கூட்டத்தை நடத்தும் என்றும் வங்கதேச வெளியுறவு அமைச்சர் டாக்டர் அப்துல் மோமெனுடன் நல்ல உரையாடல் நடந்தது என்றும் அப்போது இந்த இணைக்கூட்டத்துக்கு அவர் வரவேற்பு அளித்தார் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார். நம் தலைவர்கள் இலக்கு வைத்த லட்சியார்த்த குறிக்கோள்களை அடைய இரு நாடும் நெருக்கமாகப் பணியாற்றும் என்று தன் சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.