ப.சிதம்பரம் 
இந்தியா

எஸ்பிஐ ஊழியர்களுக்கு விஆர்எஸ்: ப.சிதம்பரம் கடும் விமர்சனம்

செய்திப்பிரிவு

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை (விஆர்எஸ்) அறிவிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கூறியதாவது:

தற்போது நிலவும் அசாதாரண சூழலில் வேலை வாய்ப்பு அரிதாகி வரும் சூழலில் இத்தகைய நடவடிக்கை மிகவும் கொடூரமானது.

இந்தியாவில் மிக அதிகளவில் வேலை வாய்ப்பை அளிக்கும் பொதுத்துறை வங்கியில் ஆள்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் மற்ற தொழில் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எத்தகைய நடவடிக்கை எடுக்கும் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

விருப்ப ஓய்வு திட்ட அறிவிப்பு மூலம் 30 ஆயிரம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப எஸ்பிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2020 மார்ச் நிலவரப்படி எஸ்பிஐ பணியாளர்கள் எண்ணிக்கை 2.49 லட்சமாகும்.

SCROLL FOR NEXT