இந்தியா

கன மழையால் நிலச்சரிவு: ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலை 2-வது நாளாக மூடப்பட்டது

பிடிஐ

கனமழையை தொடர்ந்து ஏற்பட் டுள்ள நிலச்சரிவுகள் காரணமாக, ஜம்மு - ஸ்ரீநகர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரண்டாவது நாளாக போக்கு வரத்து நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து தேசிய நெடுஞ் சாலை போக்குவரத்துக்கான எஸ்எஸ்பி, சஞ்சய் கோட்வால் நேற்று கூறும்போது, “ராம்பன் மாவட்டத்தில் பட்டோட்டி - பனி ஹால் இடையே பல்வேறு இடங் களில் இச்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே பல வாகனங்கள் சிக்கியுள்ளன. தொடர்ந்து கனமழை இருப்பதால் சாலையை சீரமைக்கும் பணி தடைபட்டுள்ளது. வானிலை மாற்றத்தை எதிர்பார்த்து காத்துள் ளோம். சாலை சீரமைப்புக்காக எல்லைச் சாலைகள் நிறுவனத்தின் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்” என்றார்.

இதுதவிர காஷ்மீரில் பட்டோட்டி தோடா கிஸ்துவார் இடையிலான நெடுஞ்சாலையும் நேற்று இரண்டாவது நாளாக மூடப்பட்டது. இச்சாலையில் ராக்கி நல்லா, கோடா பானி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT