இந்தியா

நான்கு கிறித்துவ என்.ஜி.ஓ. அமைப்புகளின் உரிமம் ரத்து: வெளிநாட்டு நிதிப்பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை

விஜய்தா சிங்

இந்த ஆண்டு 6 என்.ஜி.ஓ.க்கள் அமைப்பின் வெளிநாட்டிலிருந்து நிதி பெறும் உரிமம் ரத்து செய்யப்பட்டதில் 4 கிறித்துவ அமைப்புகளும் அடங்கும். அயல்நாடுகளிலிருந்து நிதி பெறுவதற்கு எஃப்.சி.ஆர்.ஏ. எனப்படும் வெளிநாட்டு நிதிபங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் உரிமம் பெறுவது அவசியமாகும்.

இதில் அமெரிக்காவைச் சேர்ந்த நன்கொடையளிக்கும் 2 கிறித்துவ நன்கொடை அமைப்புகளும் மத்திய அரசின் கண்காணிப்பில் உள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள செவந்த் டே அத்வந்து மற்றும் பேப்டிஸ்ட் சர்ச் உள்ளிட்ட அமைப்புகள் இந்திய என்.ஜி.ஓ.க்களுக்கு நன்கொடை அளிப்பதன் நோக்கம் குறித்த கவலைகள் எழுந்துள்ளதால் விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்றார் அந்த மூத்த அதிகாரி.

ஜார்கண்டில் உள்ள எக்ரியோசொக்யூலிஸ் நார்த் வெஸ்டர்ன் காஸ்னர் இவாஞ் செலிக்கல், மணிப்பூரில் உள்ள சர்ச் கூட்டமைப்பு, ஜார்கண்டில் உள்ள லூதரன் சர்ச், மும்பையில் உள்ள நியு லைஃப் ஃபெலோஷிப் அசோசியேஷன் ஆகியவற்றின் வெளிநாட்டு நிதிபெறும் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் ரத்து செய்ததற்கான காரணம் கூறப்படவில்லை. என்ன மீறல் என்பதும் குறிப்பிடப்படவில்லை.

மும்பையில் கடந்த ஏப்ரலிலும், கடந்த ஆண்டு செப்டம்பரிலும் நியூலைஃப் பெலோஷிப் அசோசியேஷனில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தை பஜ்ரங் தள் அமைப்பு இடையூறு செய்து தடுத்தது. மதமாற்றம் செய்கின்றனர் என்பது பஜ்ரங் தள் வாதமாகும். நியூ லைஃப் அமைப்பின் அயல்நாட்டு நிதிபெறும் உரிமம் பிப்ரவரி 10ம் தேதி ரத்து செய்யப்பட்டது என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவலாகும். 1964களிலிருந்து இது செயல்பட்டு வருகிறது.

அதே போல் மணிப்பூரில் இவாஞ்செலிக்கல் சர்ச்சஸ் அசோசியேஷன் 1952ம் ஆண்டு மணிப்பூரில் தொடங்கப்பட்டது.

வெளிநாட்டு நன்கொடை பெறும் மேலும் 2 நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இதில் ராஜ்நந்த்கவான் தொழுநோய் மருத்துவமனை மற்றும் கிளினிக்குகள், மற்றும் டான்பாஸ்கோ பழங்குடியினர் முன்னேற்ற அமைப்பு ஆகியவையாகும்.

இப்போது வரை வெளிநாட்டு நன்கொடை பெறும் சட்டத்தின் கீழ் 22,457 என்.ஜி.ஓ. அமைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 20,674 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 6,702 உரிமங்கள் காலாவதியாகியுள்ளன.

SCROLL FOR NEXT