இந்தியா

தொழிலக பாதுகாப்பு படையின் பலம் 2 லட்சமாக உயர்த்தப்படும்: ராஜ்நாத் சிங் தகவல்

பிடிஐ

மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எப்) பலம் 2 லட்சமாக உயர்த்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

ஹைதராபாத்தில் உள்ள சிஐஎஸ்எப் பயிற்சி மையத்தில், வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது:

மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் தற்போதைய பலம் 1.47 லட்சமாக உள்ளது. இதை படிப்படியாக 2 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

சிஐஎஸ்எப் மீதான நம்பிக்கை மக்களிடையே மட்டுமின்றி, உள் துறை அமைச்சகம், மத்திய அரசிட மும் அதிகரித்துள்ளது. எனவே இதன் பலத்தை உயர்த்த விரும்பு கிறோம். இப்படையில் தற்போது பெண்கள் 5.04 சதவீதம் பேர் உள்ளனர். யூனியன் பிரதேசங்களில் போலீஸ் படைகளில் 33 சதவீதம் பெண்களை தேர்வு செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுபோல் மத்திய துணை ராணுவப் படைகளில் பெண்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும். இவ் வாறு அவர் பேசினார்.

          
SCROLL FOR NEXT