தொற்றுச் சங்கிலியைத் தகர்க்குமாறும், இறப்பு விகிதத்தை ஒரு சதவீதத்துக்கும் குறைவாகக் கொண்டு வருமாறும் மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகாவுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்துள்ள அல்லது சில மாவட்டங்களில் இறப்பு விகிதம் அதிகரித்துள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய சுகாதார அமைச்சகம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.
நோய்த் தொற்றுச் சங்கிலியைத் தகர்க்குமாறும், இறப்பு விகிதத்தை ஒரு சதவீதத்துக்கும் குறைவாகக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்துமாறும் மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
அதிக அளவிலான பரிசோதனைகள் மற்றும் செயல்மிகு மருத்துவ மேலாண்மை ஆகியவற்றின் மூலம் இறப்பு விகிதத்தைக் குறைக்க இந்த மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. பல்வேறு மட்டங்களில் சிறப்பான கண்காணிப்பின் மூலம் உயிர்களைக் காப்பாற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் உறுதி செய்யப்பட்டுள்ள பாதிப்புகளில், 46 சதவீதம் மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் மட்டுமே 22 சதவீதப் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.