நாட்டில் பொருளாதாரம் பின்னடைவு கண்டுள்ளதையடுத்து புதிய பதவிகளை உருவாக்குவதை நிறுத்தி வைக்க வேண்டும், செலாவணித்துறை ஒப்புதலுடன் தான் புதிய அரசு பதவிகள் உருவாக்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து ’குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச தனியார்மயம்’ என்று ராகுல் காந்தி மத்திய அரசின் இந்தத் திட்டத்தை விமர்சித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக வெளியான ஊடகச் செய்தியையும் டேக் செய்த ராகுல் காந்தி தன் ட்விட்டரில், “மோடி அரசின் சிந்தனை குறைந்தபட்ச அர்சு, அதிகபட்ச தனியார்மயம் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தி மொழியில் மேற்கொண்ட ட்வீட் பதிவில், கரோனா பெருந்தொற்றை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு அரசாங்கத்தில் நிரந்தர ஊழியர் இல்லாமல் செய்து விட வேண்டும் என்பதே ஆளும் கட்சியின் நோக்கம்
இளைஞர்களின் எதிர்காலத்தை வேரறுத்து நண்பர்களை நுழைக்க வேண்டும் என்று மோடி அரசின் நோக்கத்தை விமர்சித்த ராகுல் காந்தி மக்கள் இது குறித்து குரல் எழுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.