இந்தியா

பாஜக - சிவசேனா சிக்கல் தீர்ந்தது: அமைச்சராக பொறுப்பேற்றார் ஆனந்த் கீதே

செய்திப்பிரிவு

இலாகா ஒதுக்கீடு தொடர்பாக பாஜக - சிவசேனா இடையே நிலவி வந்த சிக்கல் தீர்ந்தது.

அனந்த் கீதே, கனரக தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி மக்களவை தேர்தலில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணியில் 2-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறது.

ஆனால், பிரதான துறைகள் ஒதுக்கப்படாமல் கனரக தொழில்துறை இலாகா ஒதுக்கப்பட்டதற்கு சிவசேனா அதிருப்தி தெரிவித்திருந்தது.

இதனால் கேபினட் அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட போதும், கீதே அமைச்சராக பொறுப்பேற்காமல் இருந்தார்.

இந்நிலையில், இலாகா ஒதுக்கீடு தொடர்பாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து ஆனந்த் கீதே, கனரக தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன், இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

SCROLL FOR NEXT