திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சனிக்கிழமை 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தங்கும் விடுதிகள், தலைமுடி காணிக்கை செலுத்துமிடங்கள், லட்டு பிரசாதம் விநியோகிக்கும் இடம், அன்னதான சத்திரம், பஸ் நிலை யம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள், தர்ம தரிசனம் செய்ய 20 மணி நேரமும், சிறப்பு தரிசனம் செய்ய 4 மணி நேரமும் காத்திருந்தனர். மலை வழிtப்பாதையில் நடத்து வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வெள்ளிக்கிழமை 56,104 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.