இந்தியா

புத்தூர் அருகே ரூ. 1.6 கோடி மதிப்பு செம்மரம் பறிமுதல்

செய்திப்பிரிவு

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து கடத்தப்பட்ட ரூ. 1.6 கோடி மதிப்புள்ள செம்மரங்களை புத்தூர் வனத்துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து நேற்று காரில் 2 டன் செம்மரங்கள் சென்னைக்கு கடத்தப்பட்டது. அப்போது திருப்பதி-புத்தூர் சாலையில் தணிக்கை சாவடி அருகே ஆந்திர வனத்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருப்பதை கண்ட செம்மர கடத்தல் கும்பல், வேகமாக நிற்காமல் சென்றது. இதனை தொடர்ந்து சந்தேகம் அடைந்த வனத்துறையினர் அந்த காரை துரத்தி சென்றனர்.

அப்போது, அந்த காரை, புத்தூர் அடுத்துள்ள திம்மாபுரம் அருகே நிறுத்திவிட்டு செம்மர கடத்தல்காரர்கள் தப்பி தலைமறைவாயினர். பின்னர் அந்த காரை சோதனையிட்டதில், அதில் 2 டன் எடையுள்ள 66 செம்மரங்கள் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 1.6 கோடி என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து காருடன் செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான கடத்தல்காரர்களை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT