இந்தியா

ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் பூனியாவுக்குக் கரோனா பாசிட்டிவ்

ஏஎன்ஐ

இந்தியாவில் கரோனா பாதிப்பின் தாக்கம் அதிகரித்து வருகிறது, கடந்த 24 மணிநேரத்தில் 83 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குக் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.

இந்நிலயில் ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியாவுக்கு கரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது, இதனை அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“நேற்று எனக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லாவிட்டாலும் கரோனா பாசிட்டிவ் என்று முடிவு வெளிவந்துள்ளது. தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் கரோனா டெஸ்ட் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் கரோனாவுக்குப் பலியாக மொத்த பலி எண்ணிக்கை 1095 ஆக உள்ளது.

ராஜஸ்தானில் மொத்தம் 84,674 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதில் 70,674 பேர் குணமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT