தீவிரவாத இயக்கங்களுக்கு சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெறும் புகார் ஏற்பட்டுள்ள நிலையில் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீ நகர் மற்றும் குப்வாராவில் வருமான வரித்துறை சோதனைகளை நடத்தியது
ஸ்ரீ நகர் மற்றும் குப்வாராவில் உள்ள மூன்று முக்கியமான தொழிலதிபர்கள் தொடர்பான வழக்கில் தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை 2 செப்டம்பர், 2020 அன்று ஒரே சமயத்தில் வருமான வரித்துறை மேற்கொண்டது.
இந்த சோதனைகளின் போது பெரிய அளவிலான கணக்கில் காட்டப்படாத வருமானமும், இந்த மூன்று குழுமங்களின் பினாமி பரிவர்த்தனைகளும் கண்டுபிடிக்கப்பட்டு, கணக்கில் வராத சொத்துகள் மற்றும் ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன
இந்தக் குழுமங்களில் ஒன்றின் முக்கிய நபர் ஒருவர், அரசால் ஏப்ரல் 2019-இல் தடை செய்யப்படும் வரை எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டிய வர்த்தகத்தை நடத்தி வந்தது சோதனையின் போது கண்டறியப்பட்டது.
அவர் இரண்டு நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டைகள் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானில் அவரது மகளின் படிப்புக்காக செலவு செய்யப்பட்டதற்கான ஆதாரங்களும் சிக்கின.