இந்தியா

சன்னி லியோன், நேஹா கக்கருக்குப் பிறகு கல்லூரி தகுதிப் பட்டியலில் பிரபல கார்ட்டூன் கேரக்டர் ஷின்ச்சன்- மே.வங்கத்தில் தொடரும் தமாஷ்

பிடிஐ

சன்னி லியோன் மற்றும் பாடகர் நேஹா கக்கருக்கு பிறகு மேற்கு வங்க கல்லூரி தகுதிப் பட்டியலில் தற்போது பிரபல கார்ட்டூன் கதாபாத்திரமான ஷின்ச்சன் நொஹாரா பெயர் இடம்பெற்றுள்ளது.

பி.எஸ்சி (ஆனர்ஸ்) பட்டப்படிப்பின் தகுதிப் பட்டியலில் டாப்பில் ஷின்ச்சன் நொஹாரா பெயர் இடம்பெற்றுள்ளது, இது நடந்தது வடக்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரி கல்லூரியில்தான்.

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது, “அந்தப் பெயர் உடனே நீக்கப்பட்டு புதிய பட்டியலை கல்லூரி வெப்சைட்டில் வெளியிட்டுள்ளோம், இது ஏதோ குறும்பு வேலை இது தொடர்பாக போலீஸ் புகார் அளித்துள்ளோம்.

ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது அவர்கள் அளிக்கும் விவரங்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியலைத் தயாரிக்கும் பொறுப்பை கல்லூரி ஏஜென்சி ஒன்றிற்கு அவுட் சோர்ஸ் செய்தது. ஆனால் மாணவர்கள் அளித்த விவரங்களைவகுப்புகள் தொடங்கும் முன்பாக கல்லூரி நிர்வாகம் ஆய்வு செய்யும்” என்றார்.

மால்டா மனிக்சக் கல்லூரியிலும் இதே போல் பி.ஏ.ஆங்கிலம் (ஆனர்ஸ்) பட்டப்படிப்புக்கான தகுதி பெறுவோர் பட்டியலில் பாடகர் கக்கர் பெயர் இடம்பெற்றது. சன்னி லியோன் பெயர் வேறு 3 கல்லூரிகளின் தகுதிப் பட்டியலில் இடம்பெற்றது.

4 கல்லூரிகளும் சைபர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த ஆண்டு கல்லூரி அனுமதி எல்லாமே ஆன்லைன் மூலமே என்று மேற்கு வங்க அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து தொடர்ச்சியாக இத்தகைய தமாஷ்கள் அங்கு நடைபெற்று வருகின்றன.

அடுத்து யார் பெயர் தகுதிப் பட்டியலில் வரப்போகிறதோ என்று கல்லூரி நிர்வாகிகள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு நடமாடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT