ஜம்முவில் உணவு விடுதி ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில், இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.
மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் நிகழ்ந்த தீ விபத்தால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. காயமடைந்த 11 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
உணவு விடுதியின் கீழ் தளத்தில் இருந்த சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ மேல் தளத்திற்கும் பரவியதாக சம்பவத்தின்போது அருகாமையில் இருந்த ஊழியர்கள் கூறியுள்ளனர்.