இந்தியா

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: மும்பை விமான நிலையம் தாஜ் ஹோட்டலுக்கு பலத்த பாதுகாப்பு

செய்திப்பிரிவு

மும்பையில் உள்ள விமான நிலையம் மற்றும் தாஜ் ஹோட்டல் ஆகியவற்றின் மீது தீவிர வாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக தொலைபேசி யில் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை விமான நிலைய மேலாளருக்கு திங்கள்கிழமை இரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், “உள்நாட்டு, சர்வதேச விமான முனையங்கள் மற்றும் தாஜ் ஹோட்டல் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் படும். வாகனங்களில் வெடிகுண்டு களை நிரப்பி தாக்குதல் நடத்தப் போவதாக சிலர் பேசிக் கொண்டதை நான் கேட்டேன்” என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இதுகுறித்து பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் அந்தப் பகுதிகளுக்குச் சென்று தீவிர சோதனை நடத்தினர். அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. குண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரிய வந்தது. மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

2006-ல் நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேருக்கு இன்று தண்டனை வழங்க உள்ள நிலையில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியை தாக்க சதி

டெல்லியில் ஐஎஸ் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக போலீஸா ருக்கு மத்திய உளவு அமைப் புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக டெல்லி போலீஸின் உளவுப் பிரிவு, அதன் சிறப்பு பிரிவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பண்டிகை காலம் தொடங்க உள்ள நிலையில், ஐஎஸ் தீவிர வாதிகள் ஒருவராக மறைந் திருந்தோ, இரண்டு மூன்று பேர் சேர்ந்தோ தாக்கு தலில் ஈடுபடலாம் என்று உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

SCROLL FOR NEXT