தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்பிஆர்), மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகியவற்றின் முதல்கட்டப்பணிகள் கரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020-ம் ஆண்டில் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் மிகவும் முக்கியத்தவும் வாய்ந்த என்பிஆர் பதிவேடு, மக்கள் தொகைக்கணக்கெடுப்பை வீடுதோறும் சென்று நடத்தும் சூழல் இல்லை , இரு பணிகளும் ஒத்திவைக்கப்படலாம், கரோனா தாக்கம் குறையாதப ட்சத்தில் ஓர் ஆண்டு தாமதமும் ஆகலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் நடத்தப்படும் மக்கள் தொகைக்கணக்கெடுப்புதான் உலகிலேயே மிகப்பெரிய நிர்வாகரீதியான, புள்ளியியல்சார்ந்த பணியாகும். ஏறக்குறைய 30 லட்சம் ஊழியர்கள் இதில் ஈடுபட்டு நாட்டின் கடைக்கோடி கிராமம் வரை சென்று வீடுகளில் கணக்கெடுப்பை நடத்துவார்கள்.
மத்திய அ ரசு திட்டமிட்டபடி, மக்கள்தொகைக் கணக்கெடுப்பும், என்பிஆர் பதிவேடு முறையும், 2020 ஏப்ரல் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதிவரை நடத்த முடிவு செய்யப்பட்டுஇருந்தது. ஆனால், கடந்த மார்ச் மாதத்திலிருந்து கரோனா வைரஸ் பரவல் அதிகரித்தவாறு இருப்பதால், இந்தப்பணிகள் இன்னும் தொடங்கப்படாமலேயே இருக்கிறது.
இன்றையநிலவரப்படி நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு 35 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது, 63 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 78 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், இந்தப்பணிகளை ஒத்தி வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு ஏற்கெனவே அறிவி்த்தபடி மக்கள் தொகைக்கணக்கெடுப்பும், என்பிஆர் பதிவேடு முறையும் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கப்பட இருந்தது. ஆனால், பல்வேறு மாநிலங்கள் மக்கள் தொகைக்கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்போம் , என்பிஆர் பதிவேட்டுக்கு ஒத்துழைக்க முடியாது எனத் தெரிவித்து வந்தனர். கடந்த 2010-ம் ஆண்டு கடைசியாக என்பிஆர் பதிவேடு செய்யப்பட்டது, அதன்பின் 2015-ம் ஆண்டு அப்டேட் மட்டும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ இப்போதுள்ள சூழலில் மக்கள் தொகைக்கணக்கெடுப்பு ஒன்றும் அவசியமானது அல்ல. ஒரு ஆண்டுதாமதம் ஆனாலும்கூட, யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.
ஆனால், 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் என்பிஆர் பதிவேடு, மக்கள் தொகைக்கணக்கெடுப்பு இரண்டையும் தொடங்குவது குறித்து மத்திய அரசு எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை. ஆனால், நாட்டில் கரோனா பரவல் இருக்கும் சூழலில், 2020ம் ஆண்டு என்பிஆர், மக்கள்தொகைக்கணக்கெடுப்பு ஆகிய இரு பணிகளும் நடக்க வாய்ப்பில்லை.
ஏனென்றால், இரு பணிகளுக்கும் லட்சக்கணக்கான பணியாளர்கள் ஈடுபடுவார்கள், வீடு வீடாக ஒவ்வொரு குடும்பத்தாரையும் சந்திக்க வேண்டியிருக்கும். ஆதலால், இதில் ஊழியர்களின் உடல்நலத்தோடு விளையாட யாரும்தயாராக இல்லை. கரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போதுள்ள நிலையில் மத்திய அரசு என்பிஆர், மக்கள் தொகைக்கணக்கெடுப்புக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.