இந்தியா

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாமல் பெரும்பான்மையாகும் சிறுபான்மையினர்: தடுத்து நிறுத்த பொது சிவில் சட்டம் அவசியம் –சாதுக்கள் சபையின் தலைவர் கருத்து

ஆர்.ஷபிமுன்னா

மக்கள் தொகையை கட்டுப்படுத்தாமல் சிறுபான்மையினர் பெரும்பான்மையினராகி வருவதாக அகில இந்திய சாதுக்கள் சபையின் தலைவர் மஹந்த் நரேந்திரகிரி கருத்து கூறியுள்ளார். இதை தடுத்து நிறுத்த அனைத்து தரப்பினருக்கும் பொது சிவில் சட்டம் அமலாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள சாதுக்களின் தலைமை சபையாக இருப்பது அகில இண்டிய அஹாடா பரிஷத். இதன் தலைவரான மஹந்த் நரேந்திர கிரி நேற்று ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

அலகாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மஹந்த் நரேந்திர கிரி கூறியதாவது: ‘மதம் எனும் பெயரில் இந்து கடவுள்களை அவமதிப்பது நாடு முழுவதிலும் அதிகரித்து வருகிறது. இதற்கு மக்க தொகை கட்டுப்படுத்தப்படாமல் அதிகரிப்பது காரணம்.

இதனால், சிறுபான்மையினர் நாட்டில் பெரும்பான்மையினராகி வருகின்றனர். இதை தடுத்து நிறுத்த அனைத்து தரப்பினருக்கும் பொது சிவில் சட்டம் அமலாக்கப்பட வேண்டும்.

மக்கள் தொகை அதிகரிப்பது நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஆகும். இதனால் அனைவரும் மக்கள் தொகை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கருத்து கூறியுள்ளார்

SCROLL FOR NEXT