இந்தியா

கரோனா ஊரடங்கு கால கடன் தவணைகள் மீதான வட்டியை ரத்து செய்வது குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?- பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு காலத்தில் கடன் தவணைகள் மீதான வட்டியை ரத்து செய்யும் விவகாரத்தில் மத் திய அரசின் நிலைப்பாடு என்ன என் பது குறித்து பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை மீதான கடன் உள்ளிட்ட அனைத்து தவணை களையும் செலுத்துவதில் இருந்து கால அவகாசம் அளிக்கப்பட்டது.

இருப்பினும், கடனுக்கான வட் டியை சேர்த்து வசூலிக்கும் போது செலுத்த வேண்டிய தவணைக் காலம் அதிகரிப்பதோடு, கடன், வட்டி சுமை அதிகரிக்கும். இதை பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டினர். சலுகை என்றால் குறைந்தபட்சம் இந்த காலகட் டத்துக்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலி யுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன் றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வட்டியை முழுவதுமாக ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்துக்குள் தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் தெரி வித்துள்ளது.

நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு இம் மனுவை விசாரித்தது. கடன் மீதான வட்டியை ரத்து செய்வதற்கு போதிய அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இதுபோன்ற வட்டி ரத்து முடிவுகளை எடுக்க முடியும். ஆனால் முடிவுகளை எடுக்காமல் ரிசர்வ் வங்கியின் பின்னால் வசதியாக மத்திய அரசு ஒளிந்து கொண்டிருக்கிறது என்று நீதிபதி பூஷண் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரி விக்க ஒரு வாரகால அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து அதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இது தொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தி வருவதாக துஷார் மேத்தா தெரிவித்தார்.

பேரிடர் மேலாண்மை சட்டத் தின் கீழ் கடனுக்கான வட்டி மீது வட்டி வசூலிப்பது சுமையை அதிகரிக்காதா என்று அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இதுபோன்ற பிரச்சினைகளுக்கு பொதுவான தீர்வு பொருந்தாது என்று குறிப்பிட்டார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், கரோனா ஊரடங்கு கால சலுகை காலம் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைவதாகவும், அதை மேலும் நீட்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். முதலில் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணா விடில் கால அவகாச நீட்டிப்பு என் பது இப்போதைக்கு முடிவடை யாது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 1-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத் தனர்.

முந்தைய விசாரணையின் போது வட்டிக்கு வட்டி வசூலிப் பது சலுகையாக இருக்காது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரி வித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பான மனுவை ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் தாக்கல் செய் திருந்தார். இதன்பேரில் கரோனா ஊரடங்கு காலத்தில் கடனுக்கான வட்டி, தவணை செலுத்துவதில் இருந்து கால அவகாசம் அளிக்கப் பட்டது. இதுதொடர்பாக மார்ச் 27-ம் தேதி ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவில், சலுகை காலத்தில் கடனுக்கு வட்டி கணக்கிடலாம் என கூறியிருப்பது சலுகைக்கான விதிகளை மீறுவதாக உள்ளது என அந்த மனுவில் அவர் குறிப் பிட்டிருந்தார். இந்திய அரசியல் அமைப்பு சட்ட பிரிவு 21-ன்படி மக்கள் வாழும் உரிமையை பறிப்ப தாக இது உள்ளது என்றும் சுட்டிக் காட்டியிருந்தார். இதுதொடர்பாக உரிய உத்தரவை மத்திய அரசுக் கும் ரிசர்வ் வங்கிக்கும் உச்ச நீதி மன்றம் பிறப்பித்து, சலுகை காலத் தில் வட்டி வசூலிக்காமல் ரத்து செய்து நிவாரணம் அளிக்க வேண் டும் என சர்மா தனது மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.

SCROLL FOR NEXT