இந்தியா

மனநல மறுவாழ்வுக்கான ஹெல்ப்லைன் தொடங்குவது ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

மனநல மறுவாழ்வுக்கான 24x7 கட்டணமில்லா ஹெல்ப்லைன் தொடங்குவதை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஒத்திவைத்துள்ளது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், மனநல மறுவாழ்வுக்கான ஆலோசனை வழங்கும் “கிரண்” என்ற இலவச ஹெல்ப்லைனை (1800-599-0019) துவக்கும் நிகழ்ச்சியை இம்மாதம் 27-ம் தேதியன்று காணொலிக் காட்சி வாயிலாக நடத்த இருந்தது.

இந்த நிகழ்வு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்ப்லைன் துவக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT