இந்தியா

இட ஒதுக்கீடு போராட்டம்: படேல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை

மகேஷ் லங்கா

படேல் சமூகத்தைச் சேர்ந்த உமேஷ் படேல் என்ற 34 வயது நபர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி இவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

ராஜ்கோட்டைச் சேர்ந்த உமேஷ் படேல் அகமதாபாத் புறநகர்ப்பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

போலீஸ் இவரது பாக்கெட்டிலிருந்து எடுத்த தற்கொலை குறிப்பில், “படேல் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த போராட்டத்தில் நான் உங்களுடன் இருக்கப் போவதில்லை. ஆனால் எனது தியாகம் வீணாகிவிடக் கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.

அதே போல் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னால் தனது நண்பர்கள் சிலருக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ்.-இல் “இந்தச் செய்தியை நீங்கள் பார்க்கும் போது நான் வெகுதொலைவு சென்றிருப்பேன். உங்களை விட்டுச் செல்வதற்காக என்னை மன்னிக்கவும், ஆனால் போராட்டத்தை தொடருங்கள்” என்று கூறியிருக்கிறார்.

இவருக்கு வேறு ஏதாவது பிரச்சினைகள் இருந்ததா என்பதை போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.

இவர் தனது பெற்றோர், மனைவி ஆகியோரிடமும் தனது இந்த முடிவுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்நிலையில் ஹர்திக் படேல் தலைமை படீதார் அனமத் ஆந்தோலன் சமிதியை படேல்கள் போராட்டத்துக்கு அறிமுகம் செய்த சர்தார் படேல் குழுவின் தலைவர் லால்ஜி படேல், “உமேஷ் படேல் என்பவர் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. எனவே படேல் சமூகத்தினரிடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் அத்தகைய முடிவை எடுக்க வேண்டாம் என்பதே. மகாத்மா காந்தியின் அகிம்சா வழியில் நாம் தொடர்ந்து போராடுவோம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT