இந்தியா

மம்தா ஆட்சியை நெருக்கும் மேற்கு வங்க ஆளுநர்; முதலீடுகளை ஈர்த்துள்ளதாகக் கூறுவது பிரச்சாரமே எனக் குற்றச்சாட்டு 

பிடிஐ

மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தங்கர், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு பலவிதங்களில் நெருக்கடி தருவதாக குற்றச்சாட்டுகள் தொடரும் நிலையில், மேற்கு வங்கம் முதலீடுகளை ஈர்ப்பதில் வெற்றி கண்டிருப்பதாகக் கூறுவது வெறும் பிரச்சாரமே என்று மம்தா அரசு மீது புதிய தாக்குதலைத் தொடுத்துள்ளார்.

மேலும் சமீபமாக நடந்த பெங்கால் உலக வர்த்தக உச்சி மாநாட்டின் செலவின விவரங்களை தான் கேட்டிருப்பதாகவும் மம்தா அரசின் நிதியமைச்சர் அதைத் தர மறுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

உலக வர்த்தக மாநாட்டை மம்தா பானஜ்ரி முதலீடுகளை ஈர்க்க 2015 முதலே நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆளுநர் ஜக்தீப் தங்கர், தன் சமூக வலைத்தளப் பக்கத்தில், “12.3 லட்சம் கோடி முதலீடு ஈர்த்துள்ளதாக கூறுவது எதார்த்தத்தை பிரதிபலிப்பதாக இல்லை, அதனால் விவரங்களைக் கேட்டுள்ளேன்.” என்று கூறி அடால்ஃப் ஹிட்லரின் அரசில் பிரச்சார அமைச்சராக இருந்த கோயபெல்ஸ் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

மம்தா அரசு வெளிப்படையாகச் செயல்பட்டு வருவதாகக் கூறி வருகிறது, ஆனால் அனைத்தும் மறைக்கப்படுகிறது என்று அவர் மேலும் குற்றம்சாட்டினார்.

உலக வர்த்தக மாநாட்டில் தணிக்கை அறிக்கை எங்கே என்று கேட்டுள்ள ஆளுநர், இது தொடர்பாக ஏன் விசாரணை மேற்கொள்ளக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT