இந்தியா

புல்வாமா பயங்கரவாதத் தாக்கு வழக்கு: என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிக்கையில் தீவிரவாதி மசூத் அசார் உட்பட 19 பேர்

விஜய்தா சிங்

நாட்டையே உலுக்கிய, 40 சிஆர்பிஎஃப் வீரர்களின் உயிர்களைப் பலிவாங்கிய புல்வாமா கொடூர பயங்கரவாதத் தாக்குதலில் தேசிய புலனாய்வு முகமை நேற்று குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்தது. சுமார் 13,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை ஜம்முவில் உள்ள நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் ஜே.இ.எம். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த மசூத் அசார் உட்பட 19 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பிப்ரவரி 14, 2019- அன்று நடந்த இந்தக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ஜவான்கள் சென்ற பேருந்து வெடிவைத்து தகர்க்கப்பட்டது. பேருந்தை சிதறடித்த வெடிபொருட்கள் நிரம்பிய அந்தக் காரில் 200 கிலோ எடைகொண்ட இரண்டு ஐ.இ.டிக்கள் இருந்ததாக இந்தக் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

35 கிலோ அதிசேத விளைவிப்பு ஆர்.டி.எக்ஸ் வெடிபொருள் மார்ச்-மே 2018-ற்குக் இடையே 3 தடவையாக பாகிஸ்தானிலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பாகிஸ்தான் - ஜம்மு எல்லையின் ஹிராநகர் செக்டாரிலிருந்து ஊடுருவி இந்தப் பொருட்களை இங்கு கொண்டு வந்துள்ளனர்.

பிப்ரவரி 6ம் தேதியே தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டது, ஆனால் பனிப்பொழிவு பெரிய அளவில் இருந்ததால் வெற்றி பெறவில்லை. இந்தத் தாக்குதலில் மசூத் அசார் உட்பட 7 பாகிஸ்தானிய தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர்.இதில் உமர் பரூக் காஷ்மீர் என்கவுண்டரில் மார்ச் 29-ல் கொல்லப்பட்டார்.

ஜே.இ.எம். அமைப்பு தன் தீவிரவாதிகளை ஆப்கானில் தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாத பயிற்சி முகாமுக்கு அனுப்பியது. உமர் பரூக் 2016-17-ல் ஆப்கானில் விரிவான தீவிரவாத பயிற்சியில் ஈடுபட்டார். இவர் ஏப்ரல் 2018-ல் காஷ்மீருக்குள் ஊடுருவினார். புல்வாமாவின் ஜே.இ.எம். கமாண்டராக பொறுப்பேற்றார்.

உமர் பரூக் மற்றும் இவரது பாகிஸ்தனிய கூட்டாளிகளான மொகமது கம்ரன், மொகமது இஸ்மாயில், குவாரி யாசிர், சமீர் தார், தற்கொலைக் குண்டு நிபுணன் ஆதில் அகமது தார், ஆகியோர் புல்வாமா சிஆர்பிஎஃப் வீரர்கள் மீதான தாக்குதலை திட்டமிட்டனர்.

பிற குற்றவாளிகளான ஷகிர் பஷீர், இன்ஷா ஜான், தரீக் அகமது ஷா, பிலால் அகமது, ஆகியோர் தாக்குதலுக்கு வசதி செய்து கொடுத்ததொடு தீவிரவாதிகளை தங்கள் வீடுகளில் தங்க வைத்துள்ளனர்.

ஜனவரி 2019-ல் பரூக், சமீர் தார், தாக்குதல் குறித்த வீடியோவை தயாரித்தனர். ஜவான்கள் பேருந்து தாக்கப்பட்ட பிறகு இந்த வீடியோ வெளியிடப்பட்டது.

அயல்நாட்டு சட்ட அமலாக்க முகமைகள் தங்கள் விசாரணைக்கு இந்த தாக்குதலில் உதவியதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT