இந்தியா

லடாக் எல்லையில் வட்டமிடும் சீன ஹெலிகாப்டர்கள்: ஏவுகணைகளுடன் இந்திய வீரர்கள் குவிப்பு

செய்திப்பிரிவு

லடாக் எல்லைப் பகுதிகளில் சீன ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் வட்டமிட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து, ஊடுருவல் முயற்சிகளை முறி யடிக்கும் வகையில் அங்கு ஆயி ரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்கள் ஏவுகணைகளுடன் குவிக் கப்பட்டுள்ளனர்.

கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மே மாத தொடக்கத்தில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அங்கு பதற்றமான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் 15-ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந் தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, எல்லையில் இருநாடு களும் படைகளைக் குவித்தன. இத னால் போர்ப் பதற்றம் உருவானது. இதைத் தணிப்பதற்காக இரு நாடுகள் இடையே ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரு கிறது. இதன் விளைவாக, எல்லை யின் சில பகுதிகளில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கியுள்ளது. எனினும், ஒரு சில இடங்களில் மட்டும் அந்நாட்டு ராணுவ வீரர்கள் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். அங்கிருந்தும் அவர்களை வெளி யேற்றுமாறு சீனாவிடம் இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இந்தச் சூழலில், லடாக்கில் உள்ள இந்திய எல்லைப் பகுதி கள் அருகே சீனாவின் ராணுவ ஹெலிகாப்டர்கள் நேற்று முன் தினம் இரவு முதல் வட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் சீன ஹெலிகாப்டர்கள் சுற்றிவரு கின்றன. இதையடுத்து, எல்லை யில் கண்காணிப்பு தீவிரப்படுத் தப்பட்டுள்ளது. சீனா ஏதேனும் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டால் அதை முறியடிப்பதற்காக அங்கு ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட் டுள்ளனர். அவர்களிடம் தரையில் இருந்து வான் இலக்குகளை தாக் கக் கூடிய ஏவுகணைகள் வழங்கப் பட்டிருப்பதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தோளில் சுமந்தபடி ஏவுகணை களை வானில் ஏவும் அதிநவீன கருவிகளுடன் இந்திய வீரர்கள் கிழக்கு லடாக்கின் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், போர் விமானங்கள் மூலமாகவும் லடாக் பகுதியில் ராணுவ வீரர்கள் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT