இந்தியாவில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24 லட்சத்தைக் கடந்துள்ளது. அதேசமயம், உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60 ஆயிரத்து 975 பேருக்குப் புதிதாகக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தப் பாதிப்பு 31 லட்சத்து 67 ஆயிரத்து 323 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24 லட்சத்து 4 ஆயிரத்து 585 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவில் இருந்து 75.92 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்து 4 ஆயிரத்து 348 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தப் பாதிப்புடன் ஒப்பிடுகையில் இது 24.24 சதவீதம் மட்டுமாகும்.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸால் 848 பேர் உயிரிழந்தனர். உயிரிழப்பு சதவீதம் 1.84 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிபட்சமாக மகாராஷ்டிராவில் 212 பேர் உயிரிழந்தனர்.
அதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் 127 பேர், தமிழகத்தில் 97 பேர், ஆந்திராவில் 86 பேர், உத்தரப் பிரதேசத்தில் 61 பேர், மேற்கு வங்கத்தில் 57 பேர், பஞ்சாப்பில் 43 பேர் உயிரிழந்தனர்.
ஜார்க்கண்டில் 18 பேர், மத்தியப் பிரதேசத்தில் 17 பேர், டெல்லியில் 13 பேர், ராஜஸ்தானில் 12 பேர், கேரளாவில் 11 பேர் உயிரிழந்தனர்.
அசாம், ஹரியாணா, ஒடிசாவில் தலா 10 பேர், சண்டிகர், தெலங்கானாவில் தலா 9 பேர், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்டில் தலா 7 பேர், புதுச்சேரி, திரிபுராவில் 5 பேர், கோவாவில் 4 பேர், பிஹாரில் 3 பேர், அந்தமான் நிகோபர் தீவுகளில் 2 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று 212 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்தப் பலி எண்ணிக்கை 22 ஆயிரத்து 465 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 443 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 97 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 6,614 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 53 ஆயிரத்து 282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில் 11 ஆயிரத்து 626 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 13 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,313 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் 14 ஆயிரத்து 552 பேர் சிகிச்சையில் உள்ளனர். 13 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,908 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 81,210 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 127 பேர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 4,810 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் 20,387 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திராவில் 89 ஆயிரத்து 516 பேர் சிகிச்சையில் உள்ளனர். 86 பேர் நேற்று பலியானதையடுத்து ஒட்டுமொத்த உயிரிழப்பு 3,368 ஆக அதிரித்துள்ளது.
தெலங்கானாவில் 23 ஆயிரத்து 737 பேர் சிகிச்சையில் உள்ளனர். அங்கு நேற்று மட்டும் 9 பேர் பலியானதையடுத்து, உயிரிழப்பு 770 ஆக அதிகரித்துள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.