இந்தியாவில் கரோனா தொற்று எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்துள்ளது, குணமடைந்தோர் எண்ணிக்கை 23 லட்சத்தை நெருங்குகிறது என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 69 ஆயிரத்து 239 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 30 லட்சத்து 44 ஆயிரத்து 940 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 7-ம் தேதி 20 லட்சத்தை எட்டிய நிலையில், அடுத்த 16 நாட்களில் 10 லட்சம் பேர் புதிதாக நோய்த தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் ஒருலட்சத்தை எட்டுவதற்கு 110 நாட்கள் தேவைப்பட்டது.
10 லட்சம் பேர் பாதிப்பு என்ற நிலையைக் கடப்பதற்கு 59 நாட்கள் தேவைப்பட்டது. 20 லட்சத்தை எட்டுவதற்கு 21 நாட்கள் தேவைப்பட்ட நிலையில், 20 முதல் 30 லட்சத்தை 16 நாட்களில் எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் ஆறுதல் அளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22 லட்சத்து 80 ஆயிர்தது 566 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் வீதம் 74.90 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்து 7 ஆயிரத்து 668 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில், 23.24 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 912 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 56 ஆயிரத்து 706 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு சதவீதம் 1.86 ஆகச் சரிந்துள்ளது.
அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 297 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து ஆந்திராவில் 97 பேர், கர்நாடகத்தில் 93 பேர், தமிழகத்தில் 80 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் 70 பேர், மேற்கு வங்கத்தில் 48 பேர், பஞ்சாப்பில் 45 பேர், மத்தியப்பிரதேசத்தில் 21 பேர், ஜம்மு காஷ்மீர் ,கேரளாவில் தலா 15 பேர் பலியானார்கள்.
குஜராத், டெல்லியில் தலா 14 பேர், ஹரியானாவில் 12 பேர், ராஜஸ்தான், ஜார்கண்ட், தெலங்கானாவில் தலா 11 பேர், சத்தீஸ்கர், ஒடிசாவில் தலா 9 பேர், புதுச்சேரியில் 8 பேர், அசாமில் 7 பேர், பிஹார், கோவாவில் 5 பேர், இமாச்சலப்பிரதேசத்தில் 4 பேர், உத்தரகாண்டில் 3 பேர், லடாக், மணிப்பூர், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை 3 கோடியே 52 லட்சத்து 92 ஆயிரத்து 220 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை மட்டும 8 லட்சத்துஆயிரத்து 147 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 297 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 21 ஆயிரத்து 995 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 833 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 80 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 6,420 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 53 ஆயிரத்து 710 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில் 11 ஆயிரத்து 594 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,284 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் 14 ஆயிரத்து 399 பேர் சிகிச்சையில் உள்ளனர். 14 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,881 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 82,693 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 93 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 4,615 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் 19,601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது