இந்தியா

கேரளத்தில் இன்று 2,172 பேருக்குக் கரோனா தொற்று; குணமானவர்கள் 1,292 பேர்: சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தகவல்

செய்திப்பிரிவு

கேரளாவில் இன்று 2,172 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் மூலம் 1,964 பேருக்குத் தொற்றுப் பரவல் ஏற்பட்டுள்ளது. சிகிச்சையளிக்கப்பட்ட 1,292 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே ஷைலாஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கை:

''கரோனா இறப்பு எண்ணிக்கையை 218 ஆக உயர்ந்ததை அடுத்து எடுத்த கணக்கெடுப்பில் மாநிலத்தில் சமீபத்திய 15 இறப்புகள் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சையத் அயூப் ஷா (60), சுரேந்திரன் (65), பிரதாப் சந்திரன் (62), சம்சுதீன் (76), ராகவன் பிள்ளை (76 ), திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டீபன் (50), ரஷீதா (56), ஆரிய அன்டோ (67), சசிதரன் (69); மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாத்திமா (65), திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாரதா (70), பாபு (79), கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த கதீஜா எலியாஸ் பாத்திமா (70), எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த பிருந்தா ஜீவன் (54), கோபிநாதன் (63) ஆகியோர் இத்தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஆலப்புழாவின் என்.ஐ.வி.யில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சோதனைகளுக்குப் பிறகு இன்னும் அதிகமான இறப்புகள் உறுதி செய்யப்படும்.

இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக விவரம்:

திருவனந்தபுரம் 464, மலப்புரம் 395, கோழிக்கோடு 232, பாலக்காடு 184, திருச்சூர் 179, காசர்கோடு 119, எர்ணாகுளம் 114, கோட்டயம் 104, பத்தனம்திட்டா 93 பேர். ஆலப்புழா 87, கொல்லம் 77, கண்ணூர் 62, இடுக்கி 37, வயநாடு 25.

தொடர்பு மூலம் தொற்று ஏற்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம்:

திருவனந்தபுரம் 450 , மலப்புரம் 366, கோழிக்கோடு 213, திருச்சூர் 152, பாலக்காடு 147, காசர்கோடு 111, எர்ணாகுளம் 108, கோட்டயம் 97, ஆலப்புழா 83, கொல்லம் 75, பத்தனம்திட்டா 65, கண்ணூர் 56, வயநாடு 23, இடுக்கி 18 பேர்.

பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக:

பாலக்காடு 14, மலப்புரம் 11, திருவனந்தபுரம் ஒன்பது, திருச்சூர் எட்டு, காசர்கோடு ஐந்து, எர்ணாகுளம் மூன்று, கோழிக்கோடு இரண்டு, வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் தலா ஒன்று.

இன்று கரோனா தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்கள் மாவட்ட வாரியாக:

திருவனந்தபுரம் 290 , கொல்லம் 65, பத்தனம்திட்டா 29, ஆலப்புழா 125, கோட்டயம் 92, இடுக்கி 46 , எர்ணாகுளம் 98, திருச்சூர் 50, பாலக்காடு 89, மலப்புரம் 240 , கோழிக்கோடு 20, வயநாடு 52, கண்ணூர் 56, காசர்கோடு 40 பேர்.

இதுவரை, மாநிலத்தில் கரோனா தொற்றிலிருந்து 36,539 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது, 19,538 நோயாளிகள் அதற்கான சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 37,027 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னுரிமை குழுக்களிடமிருந்து சென்டினல் கண்காணிப்பின் ஒரு பகுதியாக 1,61,361 மாதிரிகள் உட்பட மொத்தம் 13,86,775 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

25 புதிய இடங்கள் இன்று ஹாட்ஸ்பாட்களாக நியமிக்கப்பட்டன, 17 இடங்கள் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டன. கேரளாவில் இப்போது 616 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன''.

இவ்வாறு அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT