பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம்முடிவடைய உள்ளது.
இந்நிலையில் கரோனா பரவலால் சட்டப்பேரவை தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சியானராஷ்ட்ரிய ஜனதா தளம் வலியுறுத்தி வந்தது. எனினும் முதல்வர் நிதிஷ் குமார் தேர்தலை குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனமத்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.
இப்பிரச்சினையில் பிஹாரின் அனைத்து கட்சிகளிடமும் மத்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை பெற்றிருந்தது. இதையடுத்து, பிஹார் தேர்தலை குறிப்பிட்ட காலத்தில் நடத்தி முடிக்கஆணையம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய தேர்தல் ஆணைய வட்டாரம் கூறும்போது, ‘‘கரோனா பரவலை தடுக்கும் வகையில் சில கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட காலத்தில் பிஹார் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த முடிவாகி உள்ளது. இதில்இணையவழி மற்றும் கட்டுப்பாடுகளுடனான பாரம்பரிய முறையில்தேர்தல் பிரச்சாரம் அனுமதிக்கப் பட உள்ளது. இதற்கான வழிமுறைகளை ஆணையம் விரைவில் வெளியிடும்’’ என்றனர்.
பாரம்பரிய முறை பிரச்சாரத்தில் 3 பேர் மட்டும் வாக்காளர்களை தேடிச் செல்ல அனுமதிக்கப்படுவர். அதேபோல, வேட்பு மனு தாக்கலின் போதும் ஒரு வேட்பாளருடன் 2 பேர் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர்.நேரில் வர விரும்பாதவர்களுக்காக தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படும்.
தொகுதிகளில் நடைபெறும்மேடைப் பிரச்சாரக் கூட்டத்துக்கு அங்குள்ள கரோனா பரவல் நிலையை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்க அனுமதிக்கப்பட உள்ளது. இக்கூட்டங்கள் நடைபெற்றால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டி வரும்.
கரோனா பரவும் வகையிலானஎந்தவித பிரச்சார நடவடிக்கைகளுக்கும் கண்டிப்பாக அனுமதிகிடையாது. ஒரே சமயத்தில் பொதுமக்கள் கூட்டமாக வந்து வாக்குப்பதிவு செய்வதும் தடை செய்யப்படும்.
இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஆயிரம் வாக்குகள் மட்டும் பதிவு செய்ய வழிவகை செய்யப்படும். இதில் கூடுதலாக தேவைப்படும் வாக்குச்சாவடிகளையும் தேவைக்கு ஏற்ப புதிதாகஅமைக்கப்படவும் உள்ளது.