இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரையில்லாத வகையில் புதிதாக 69 ஆயிரத்து 652 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர், ஒட்டுமொத்த பாதிப்பு 28 லட்சத்தைக் கடந்துள்ளது என மத்திய சுகதாாரத்துறை அமைச்சகம் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிதாக 69 ஆயிரத்து 652 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு அளவு 28 லட்சத்து 36 ஆயிரத்து 925 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 7-ம் தேதி 20லட்சத்தை எட்டிய நிலையில் 13 நாட்களில் 8 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நம்பிக்கையளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21 லட்சத்தை நெருங்குகிறது,இதுவரை 20 லட்சத்து 96 ஆயிரத்து 664 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 73.91 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவில் சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 6 லட்சத்து 86 ஆயிரத்து 395 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் 24.20 சதவீதம் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.
கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 977 பேர் உயிரிழந்தனர், ஒட்டுமொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 53 ஆயிரத்து 866 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு வீதம் 1.90 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 346 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 126 பேர், தமிழகத்தில் 116 பேர், ஆந்திராவில் 86 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கத்தில் தலா 53 பேர், பஞ்சாபில் 23 பேர், மத்தியப்பிரதேசத்தில் 18 பேர், குஜராத்தில் 17 பேர், ஜார்க்கண்டில் 15 பேர், உத்தரகாண்டில் 14 பேர், ராஜஸ்தானில் 12 பேர், பிஹார், ஜம்மு காஷ்மீரில் தலா 11 பேர் உயிரிழந்தனர்.
அசாம், ஹரியானா, ஒடிசா, தெலங்கானா மாநிலங்களில் தலா 10 பேரும், டெல்லியில் 9 பேரும், கோவாவில் 8 பேரும், கேரளாவில் 7 பேரும், புதுச்சேரியில் 6 பேரும், சத்தீஸ்கரில் 3 பேரும், சிக்கிம், சண்டிகர், லடாக்கில் தலா ஒருவரும் உயிரிழந்தனர்.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை கரோனா பரிசோதனை எண்ணிக்கை 3 கோடியை 26 லட்சத்து 61 ஆயிரத்து 252 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை மட்டும் 9ல ட்சத்து 18 ஆயிரத்து 470 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 346 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 21ஆயிரத்து 33 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 606ஆயிரத்து 768 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 116 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 6,123 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 53 ஆயிரத்து 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில் 11 ஆயிரத்து 137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,235ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் 14 ஆயிரத்து 282 பேர் சிகிச்சையில் உள்ளனர். 17 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,837ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 81,113 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 126 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 4,327 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் 17,442 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 182 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது