சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் பாரி இயக்கத்தைச் சேர்ந்த இளம் தம்பதி போலீஸில் சரணடைந்தது. அவர்களைக் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என்று நக்ஸல் தலைவர்கள் வற்புறுத்தியதால், இம்முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ராஜ்நந்த்காவ்ன் மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் சஞ்சீவ் சுக்லா கூறியதாவது:
சந்தீப் (எ) மகேந்திர கெராமி (26) மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கத்தில் ராணுவப்பிரிவில் மகாராஷ்டிரம்-சத்தீஸ்கர் எல்லையிலுள்ள கட்ஜிரோலி பகுதியில் பணிபுரிந்தார். அப்போது, கியாராபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஷீலா என்பவரும் அதே பகுதியில், சந்தீப் பணிபுரிந்த படைப்பிரிவில் சேர்ந்தார். இருவரும் காதலித்து, நக்ஸல் தலைவர்களின் அனுமதியின் பேரில் திருமணம் செய்து கொண்டனர் என தெரிவித்துள்ளார்.