அரசியலைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச மரபுகளின்படி, நாடுமுழுவதும் அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரேமாதிரியான விவாகரத்துச் சட்டத்தை கொண்டுவரக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யா இந்த பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
விவகாரத்துச் சட்டங்களில் பல்வேறு முரண்டாபான விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை நீக்கிவிட்டு, குடிமக்கள் அனைவருக்கும் இனம், மதம், சாதி, பாலினம், பிறப்பு என எதையும் கணக்கில் கொள்ளாமல் ஒரே மாதிரியான விவாகாரத்துச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும்.
தற்போதுள்ள முறையின்படி, இந்து, பவுத்தம், சீக்கியம், ஜைனம்ஆகிய மதத்சைச் சேர்ந்த தம்பதி இந்து திருமணச்சட்டம் 19655ன் படி விவாகரத்துப் பெறுகிறார்கள். முஸ்லிம், கிறிஸ்தவர்கள், பார்ஸிகளுக்கு அவர்கள் மதத்தில் தனிச்சட்டம் விவகாரத்துக்கு இருக்கிறது. மதம்மாறி திருமணம் செய்தவர்கள் சிறப்பு திருமணச் சட்டம் 1956-ன்படி விவாகரத்துப் பெறுகிறார்கள்.
தம்பதியில் ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவராக இருந்தால், வெளிநாட்டு திருமணச் சட்டம் 1969-ன்படி விவகாரத்துப் பெறுகிறார்கள். பாலின சமத்துவ அடிப்படையிலும், மத சமத்துவ அடிப்படையிலும் விவாகரத்து இல்லை.
ஆதலால், விவகாரத்துச் சட்டத்தில் இருக்கும் பாகுபாட்டைக் களைய வேண்டும், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14,15,21 ஆகியவற்றுக்கு முரணாக இருப்பவற்றை நீக்கி, அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான விவாகரத்துச் சட்டத்தை கொண்டு வர அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
சட்ட ஆணையத்தின் மூலம் விவகாரத்துச்சட்டங்களை ஆய்வு செய்து, அனைத்து குடிமக்களுக்கும் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14,15,21,44 ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச சட்டம், சர்வதேச மரபுகளைப் பரிசீலித்து, ஆய்வு செய்து அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான விவகாரத்துச் சட்டத்தை 3 மாதத்துக்குள் கொண்டுவர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.