இந்தியா

பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எல்லையில் இந்திய வீரர்களுக்கு இனிப்பு வழங்கியது பாகிஸ்தான்

பிடிஐ

பக்ரீத் பண்டிகையையொட்டி அட்டாரி எல்லையில் பணியாற்றும் இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நேற்று இனிப்புகளை வழங்கினர்.

ஒவ்வொரு ஆண்டு பக்ரீத் பண்டிகையின்போதும் எல்லையில் இருநாட்டு வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொள்வது வழக்கம்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக எல்லையில் பதற்றம் நிலவுவதால் கடந்த ஆண்டு பாகிஸ்தான் தரப்பில் இந்திய வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கப்படவில்லை.

இதேபோல கடந்த தீபாவளியின்போது இந்திய தரப்பில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு அளிக்கப்படவில்லை.

இந்தப் பின்னணியில் இருநாட்டு எல்லை பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகளின் கூட்டம் டெல்லியில் அண்மையில் நடைபெற்றது. இதன் காரணமாக பாதுகாப்புப் படை வட் டாரத்தில் உறவு மேம்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தை யொட்டி பஞ்சாப் மாநிலம் அட்டாரி எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் நேற்று இனிப்புகளை வழங்கினர்.

SCROLL FOR NEXT