இந்தியா

ரூ.8,722 கோடிக்கு ராணுவ தளவாடம் வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

செய்திப்பிரிவு

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ராணுவ தளவாட கொள்முதல் கவுன்சில் (டிஏசி) கூட்டம் இத்துறையின் அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராணுவத்துக்கு ரூ.8,722 கோடி மதிப்பிலான தளவாடங்களை வாங்க டிஏசி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி இந்திய விமானப்படைக்கு 106 அடிப்படை பயிற்சி விமானங்கள் வாங்கப்படும். எச்டிடி-40 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானங்கள் மத்திய அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து (எச்ஏஎல்) வாங்கப்படும். மேலும் ஏகே-203 ரக துப்பாக்கிகள் மற்றும் நவீன வசதி கொண்ட ஆளில்லா விமானங்கள் (யுஏவி) வாங்கப்படும்.

இதுதவிர, போர்க்கப்பல்களில் பிரதான துப்பாக்கிகளை பொருத்துவதற்காக மேம்படுத்தப்பட்ட அதிவிரைவு துப்பாக்கி தாங்கியை (எஸ்ஆர்ஜிஎம்) வாங்கவும் டிஏசி ஒப்புதல் வழங்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT