இந்தியா

அரசியலுக்கு முழுக்குப் போட காஷ்மீர் தலைவர் ஷா பசல் முடிவு

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த ஷா பசல், 2019-ம் ஆண்டு ஜனவரியில் பணியிலிருந்து விலகினார். அதே ஆண்டில் மார்ச் மாதம், ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்க (ஜேகேபிஎம்) கட்சியைத் தொடங்கினார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி இரவில் விமானநிலையத்தில் புகுந்ததாக டெல்லி விமான நிலையத்தில் அவர் தடுக்கப்பட்டு ஸ்ரீநகருக்கு திருப்பி அனுப்பப்பட்டார். தொடர்ந்து அவர் காவலில் வைக்கப்பட்டு இருந்தார். இதனிடையே இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் காவலிலேயே இருக்கிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் அரசியலுக்கு முழுக்குப் போடுவதாக அறிவித்துள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் அவர் பதிவிட்டிருந்த கருத்துகளையும் நீக்கிவிட்டார். இதனிடையே அவர் ஐஏஎஸ் பணியை ராஜினாமா செய்திருந்தாலும், கடந்த 19 மாதங்களாக அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை. இதனால் அவர் மீண்டும் ஐஏஎஸ் பணிக்குத் திரும்புவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

          
SCROLL FOR NEXT