இந்தியா

2024-ல் ஆந்திராவில் பாஜக ஆட்சி: புதிய மாநில தலைவர் சோமு நம்பிக்கை

செய்திப்பிரிவு

விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பாஜக அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் புதிய மாநில தலைவராக சோமு வீர்ராஜு பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:

மத்திய அரசின் நலத்திட்டங்களை ஏழைகள் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். ஜன்தன் வங்கிக் கணக்கு மூலம் ஏழை பெண்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியது பாஜக தான். ஆந்திர மாநிலத்திற்கு போலவரம் அணைக்கட்டு ஒரு வரப்பிரசாதம். இதனை தற்போதைய மத்திய அரசுதான் போதிய நிதி வழங்கி கட்டி முடிக்கும். இங்குள்ள கட்சித் தலைவர்கள் தெலங்கானாவில் ஒரு பேச்சும், ஆந்திராவில் ஒரு பேச்சும் பேசி மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்கின்றனர். நாடு முழுவதும் ஒரே கொள்கையைக் கொண்ட கட்சி பாஜக. வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பாஜக ஆட்சியை கைப்பற்றும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT