இந்தியா

தெலங்கானாவில் ஒரே வாரத்தில் 3 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

பிடிஐ

தெலங்கானாவில் ஒரே வாரத்தில் 3 பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதை மாநில சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மூவரும் வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்களைத் தவிர மேலும் இருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் கூறப்படுகிறது. ஆனல் அத்தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறும்போது, "நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. அண்மையில் நடந்த கோதாவரி புஷ்கரம் விழாவில் லட்சக்கணக்கானோர் ஒரே இடத்தில் புனித நீராட திரண்டனர்.

அப்போது, நோய் தொற்று பரவியிருக்க வாய்ப்புள்ளது. மருத்துவமனையில் போதிய அளவில் மருந்து கையிருப்பு உள்ளது. அதுதவிர நோய் தடுப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்படுகின்றன" என்றார்.

SCROLL FOR NEXT