இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரே நாளில் 53,601 என்று அதிகரித்துள்ளது, இதன் மூலம் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்து 68 ஆயிரத்து 675 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 871 பேர் பலியானதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 45,257 ஆக அதிகரித்துள்ளது.
குணமடைந்தோர் விகிதம் 69.80% ஆக அதிகரித்து மொத்தம் 15 லட்சத்து 83 ஆயிரத்து 489 பேர் கரோனாவிலிருந்து விடுபட்டுள்ளனர்.
மொத்தம் 6 லட்சத்து 39 ஆயிரத்து 929 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதாவது தொடர்ந்து 4 நாட்களுக்கு பாதித்தோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 60,000த்தை கடந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 55,000த்திற்கும் கீழ் குறைந்தது.
தற்பொது 6,39,929 பேர் சிகிச்சையில் உள்ளனர், இது நாட்டின் மொத்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையில் 28.21% என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐசிஎம்ஆர் தகவல்களின் படி ஆகஸ்ட் 9 வரை 2 கோடியே 45 லட்சத்து 83 ஆயிரத்து 559 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. திங்களன்று மட்டும் 4,77,023 கரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன.