இந்தியா

4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை வேண்டும்: மோடிக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை உடனடியாக வழங்கக் கோரி அதன் ஊழியர்கல் ட்விட்டர் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

4ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை இதுவரை மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.க்கு வழங்கவில்லை. இதனால் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் தலைதூக்கியது.

இதனையடுத்து 2019-ல் மத்திய அரசு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பிஎஸ்என்எல்-க்கு வழங்க மத்திய அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

இதனையடுத்தே 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை உடனடியாக வழங்குமாறு ஊழியர்கள் சார்பாக பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 25,000த்திற்கும் மேற்பட்டோர் ட்விட்டர் வாயிலாக பிரதமரிடம் முறையிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT