இதுகுறித்து வருவாய் புலனாய்வுத் துறை (டிஆர்ஐ) அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நவி மும்பையில் உள்ள நவ சேவா துறைமுகத்தில் டிஆர்ஐ மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பைப்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 191 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆப்கானிஸ்தான் வழியாக இந்த போதைப் பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது.
பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்களுக்கு காவலில் வைத்து விசாரிக்க காவல் துறைக்கு நீதிபதி அனுமதி அளித்துள்ளார். போலீஸார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு கிலோ போதைப்பொருளின் சந்தை மதிப்பு ரூ.5 கோடி ஆகும். இதன்படி பார்த்தால் கடத்தப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.955 கோடி ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.