ரயில் போக்குவரத்து செப்டம்பர் 30-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது.
கரோனா ஊரடங்கால் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்துக்குள் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
தமிழக அரசின்கோரிக்கையை ஏற்று, தமிழகத்துக்குள் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்களான திருச்சி - செங்கல்பட்டு (02605/06) (வழி விருத்தாச்சலம்), மதுரை - விழுப்புரம் (02635/36), கோவை - காட்பாடி (02779/80), திருச்சி - மயிலாடுதுறை (வழி-மயிலாடுதுறை)(06795/96), கோவை - அரக்கோணம் (02675/76), கோவை - மயிலாடுதுறை ஜனசதாப்தி (02083/84), திருச்சி - நாகர்கோவில் இன்டர்சிட்டி (02627/28) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
ஏற்கனவே அறிக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவைகளின் ரத்து காலம் ஆகஸ்ட் 12-ம் தேதியுடன் நிறைவடைகிறது.இந்நிலையில், இந்திய ரயில்வே எக்ஸ்பிரஸ், பாசஞ்ர், மெயில், புறநகர் ரெயில் சேவைகள் அனைத்தும் செப்டம்பர் 30-ம் தேதி வரை ரத்து செய்வதாக சமூகவலை தளங்களில் செய்தி வெளியானது. ஆனால் இதனை ரயில்வே திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதுபோன்ற எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனவும், ஏற்கெனவே அறிவித்துள்ள அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் :உட்பட பல்வேறு சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது